கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிப்பால் - கூடலூரில் தக்காளி விலை கிலோ ரூ.55-ஆக சரிவு :

கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு தக்காளி வரத்து அதிகரித்ததை அடுத்து, கூடலூர் மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.55-ஆக குறைந்தது. உதகையில் கூட்டுறவு சங்கம் மூலம் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந் ததை அடுத்து தமிழகத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இதனால், தக்காளி, காய்கறிகள் சலுகை விலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் நேற்று தக்காளி விற்பனைதொடங்கியது. கிலோ ரூ.70-க்குதக்காளி விற்கப்பட்டது.தக்காளிசமையலுக்கு அவசியமானதால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் கூறும் போது, ‘உதகையில்மொத்தம் 500 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடையில் தக்காளி விற்கப்படுகிறது. உதகைமார்க்கெட்டில் கிலோ ரூ.90 மற்றும்உழவர் சந்தையில் ரூ.85-க்கு தக்காளி விற்கப்படுகிறது. கூட்டுறவுசங்கம் மூலம் கிலோ ரூ.70-க்குவிற்கப்படுவதால், மக்கள் தக்காளி வாங்க அதிகளவில் வருகின்றனர்’ என்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கூடலூர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து நேற்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக மார்க்கெட்டில் தக்காளி விலை சரிந்து, ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனையானது. சில கடைகளில் தக்காளி கிலோ ரூ.30-வரை விற்பனை செய்தனர். விலை குறைந்ததால் கூடலூரில் பொதுமக்களும் தக்காளி வாங்க கடைகளில் குவிந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE