திருப்பூரில் மனுக்கள் மூலம் மக்களை நாடும் நிகழ்வு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சியில் 10 வார்டுகள் மற்றும் பல்லடம் நகராட்சி, அவிநாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டஅவிநாசி பேரூராட்சி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று (நவ.25) மற்றும் இன்று (26) ஆகிய இரு நாட்கள், பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு, பொதுசுகாதாரம், முதியோர்,விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் இதரகோரிக்கைகள் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்களை நாடும் நிகழ்வில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.

திருப்பூர் மாநகராட்சி மண்டலம்4-க்கு உட்பட்ட 41-வது வார்டுபகுதியில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை கோரிக்கை மனுக்களாக தமிழக செய்தித்துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம்அளித்தனர். மாநகராட்சி ஆணையர்கிராந்தி குமார்பாடி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்