ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் :

ஈரோடு உணர்வுகள் அமைப்பின் மூலம் ஆண்டு தோறும் மாற்றுத்திறன் கொண்ட வர்களுக்கு இலவச திருமணம், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு 6 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. விழாவில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தின்போது ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு விருந்து வழங்கப் பட்டது. மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், தங்கத் தாலி, பட்டுப் புடவை, பட்டு வேட்டி, பட்டு சட்டை, வெள்ளி மெட்டி மற்றும் துணி வகைகளோடு சீர் வரிசைகள் கொடுக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை உணர்வுகள் அமைப்பின் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.திருமண நிகழ்வில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, எம்.சி.ஆர். நிறுவன நிர்வாக இயக்குநர் ரிக்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிசாமி, ஈரோடு மாற்றுத்திறனாளிகளின் சங்க மாவட்டத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE