புதுச்சேரியில் அனுமதி பெறாத தனி மனைகளை ஆன்லைனில் முறைப்படுத்தும் முறை தொடக்கம் :

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டப் பகுதிக்கு வெளியில் உள்ள அனுமதி பெறாத மனைப்பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகளில் அனைத்து மனைகளும் முறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது 30.01.2017 தேதிக்கு முன்னர் விற்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளை முறைப்படுத்தும் திட்டம் புதுச்சேரி அரசு, தலைமைச் செயலகம் (வீட்டுவசதி) வெளியிட்டுள்ள 20.10.2017 தேதியிட்ட அரசு ஆணை மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்ட அனுமதி பெறப்படாத மனைப்பிரிவுகளில் அமைத்துள்ள தனி மனைகளை உரிய கட்டணம் பெற்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகர அமைப்புக் குழுமங்கள், மனைகளை முறைப்படுத்தும் அனுமதியை வழங்குகிறது. ஆன்லைன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பங்கள் பெறவும் மற்றும் அனுமதி வழங்கும் முறையினை புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகர அமைப்புக் குழுமங்கள், புதுச்சேரி தகவலியல் மையத்தின் (NIC) தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, தனி மனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பம் பெறுதல், அதனை பரிசீலித்தல், உரிய கட்டணம் செலுத்துதல் மற்றும் முறைப்படுத்தும் அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்து பணிகளும் ஆன்லைன் (https:/obps.py.gov.in) மூலம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறையை முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE