செஞ்சி அருகே களையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (28). இவர் செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் வெல்டராக பணியாற்றி வருகிறார். அங்கு அவருக்கு அறிமுகமான ஏழுமலை என்பவர் கடந்த மாதம் அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி, குமரேனிடம் விவரங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் களையூரில் உள்ள குமரேசன் வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனை பிரித்து பார்த்தபோது, குமரேசன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக நியமிக்கப்படுள்ளதாகவும், 25-ம் தேதிக்குள் (நேற்று) பணியில் சேர வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அந்தப் பணி ஆணையுடன் நேற்று குமரேசன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். விசாரணையில், குமரேசனுக்கு அனுப்பப்பட்ட பணி ஆணை போலி என தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago