தோவாளை மலர் சந்தைக்கு மழையால் - பூக்கள் வரத்து குறைந்தது : மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மலர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் மகசூல் குறைந்து விட்டதால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக வெளியூர்களில் இருந்து குறைவான அளவே மலர்கள் வருகின்றன.

தற்போது சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விழாக்கள் உள்ளதால் பூக்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால், சத்தியமங்கலம், ஓசூர், உதகை, வத்தலகுண்டு, சங்கரன்கோவில், மதுரை பகுதிகளில் மழையால் பூக்கள் வழக்கத்தைவிட பாதியளவே வருகின்றன. இதுபோல் தோவாளை, செண்பகராமன்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழையால் மலர் விவசாயம் பாதிக்கப்பட்டு குறைவான அளவு பூக்களே கிடைக்கிறது.

தோவாளை மலர் சந்தையில் நேற்று விற்பனைக்கு வந்த பூக்கள் காலை 11 மணிக்குள் விற்று தீர்ந்தன. தேவைக்கு பூக்கள் கிடைக்காமல் மக்கள் சிரமம் அடைந்தனர். மல்லிகை நேற்று கிலோ ரூ.700-க்கு விற்பனை ஆனது. பிச்சி கிலோ ரூ.600, கிரேந்தி ரூ.90, ரோஜா ரூ.130, வாடாமல்லி ரூ.130-க்கு விற்பனை செய்ப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE