வேலூர் சத்துவாச்சாரி மலையில் உள்ள ‘கப் அண்ட் சாசர்’ அருவியில் இருந்து - 2 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் :

By செய்திப்பிரிவு

வேலூர் சத்துவாச்சாரி மலையில் உள்ள ‘கப் அண்ட் சாசர்’ அருவியில் இருந்து சுமார் 25 ஆயிரம் குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் இன்று தொடங்க உள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச் சினையை தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் வேலூர் மாநகராட்சி உட்பட அனைத்து நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் 984 கிராம ஊராட்சிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட அதிகபட்ச வெள்ளத்தில் காவிரி குடிநீர் திட்ட பிரதான குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன.இதனால், ஆம்பூர் நகருக்கு அடுத்த பாலாற்று பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளூர் நீராதாரங்களின் அடிப் படையில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகராட்சியில் டிராக்டர் மற்றும் பொன்னை குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் விநியோகம் செய்யப் படுகிறது.

இதற்கிடையில், சத்துவாச்சாரி மலையில் உள்ள ‘கப் அண்ட் சாசர்’ அருவியில் தொடர் மழையால் அதிகளவிலான தண்ணீர் கால்வாய் வழியாக வெளியேறி பாலாற்றில் கலந்து வருகிறது. இங்கிருந்து ஏற்கெனவே குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி மலையின் அடிவார பகுதியில் உள்ள 23 மற்றும் 24-வது வார்டு குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்துள்ளனர்.

தற்போது, பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து கப் அண்ட் சாசர் அருவியில் இருந்து தண்ணீரை தொட்டிக்கு மாற்றி விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 3.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். இங்கிருந்து சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு இன்று (நவ.26) முதல் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். ‘கப் அண்ட் சாசர்’ அருவியில் இருந்து சுத்தமான ஊற்று தண்ணீர் கிடைக்கிறது.

இதை தொட்டிக்கு மாற்றி குளோரின் கலந்து 24 மணி நேரமும் வீடுகளுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்