‘பேரணாம்பட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு வரலாறு’ :

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேரணாம்பட்டு நகரம் வரலாறு படைத்தது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரி வித்தார்.

பேரணாம்பட்டில் மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஆசிரியர் கோவிந்தன் படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்த குமார் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளு மன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் அமலு விஜயன், கார்த்திகேயன், வில்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், மறைந்த எம்எல்ஏ ஆசிரியர் கோவிந்தன் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்திய நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘பேரணாம்பட்டு நகரம் என்றைக்கும் திமுகவுக்கு கோட்டையாக இருந்து வருகிறது. பேரணாம்பட்டில் கடந்த 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஆடு, மாடு, குருவிகளைப் போல் சுட்டார்கள். வீரம் மிக்க ஊர் பேரணாம்பட்டு. பல வரலாறுகள் மறைக்கப்பட்டு விட்டது. அப்படி பேரணாம்பட்டு வரலாறும் மறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE