ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் ரூ.33 லட்சம் மோசடி செய்த சங்கச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் செயலாளராக இருந்தவர் ராஜா. இவர் 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை சங்கத்தில் கடன் பெற்ற 12 பேர் கடன் தொகையை ரொக்கமாக திருப்பி வழங்கியதில் ரூ.33 லட்சத்தை மோசடி செய்ததாக கூட்டுறவு துணைப் பதிவாளர் கோவிந்தராஜன், ராமநாதபுரம் வணிக குற்ற புலானய்வுப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவரை பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அவருக்கு இருதயக் கோளாறு இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இவர் மோசடி குற்றச்சாட்டில் ஏற்கெனவே நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago