திணைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடம் தொடர்பாக என்ஐடி குழுவின் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் திணைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுவதால், அங்கு ‘இது ஆபத்தான கட்டிடம், யாரும் நுழைய வேண்டாம்’ என பேனர் வைக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் இப்பள்ளி தொடர்பாக பொது நல வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், திருச்சி என்ஐடி நிபுணர்கள் டிச. 3-ல் பள்ளி கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். டிச.10-ல் ஆய்வறிக்கை அளிப்பார்கள். இதனால் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து, திருச்சி என்ஐடி நிபுணர் குழு பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, டிச.16-ம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago