நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் நாகராஜ் (50). இவரது மனைவி ராதா (45). இவர்களது மகன் நிரஞ்சன் (22). மென்பொருள் பட்டதாரி. இவர்கள் குடும்பத்துடன், திருப்பூர்அனுப்பர்பாளையம் விவேகானந்தர் வீதியில் வசித்து வந்தனர். கடந்தாண்டு நாகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராதா, பனியன் நிறுவனத்திலும், இணையவழியில் நிரஞ்சனும் பணியாற்றி வந்தனர். நாகராஜ் உயிரிழந்த வருத்தத்தில் இருந்த ராதாவும், நிரஞ்சனும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நிரஞ்சனின் நண்பர்கள் பலமுறை அலைபேசியில் தொடர்பு கொண்டும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதில் சந்தேகம் அடைந்த நண்பர்கள், அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, இருவரும்தூக்கில் சடலமாக தொங்கினர். தகவலின்பேரில் விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீஸார், நிரஞ்சனின் வீட்டில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில்,‘அப்பா இல்லாத உலகத்தில் வாழ விரும்பவில்லை’ என நிரஞ்சன் எழுதி வைத்திருந்தது, தெரியவந்தது. சடலங்களை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago