வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அரசியல் கட்சியினர், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நடுவங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகள் செய்யூர் தொகுதியிலும், சில பகுதிகள் திருப்போரூர் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதால் இப்பகுதி மக்கள் நலத்திட்டங்கள் பெறுவதில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆகவே, ஏதாவது ஒரே தொகுதியில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் பாகம் எண் 30, 31, 32 ஆகிய பகுதியில் அதிகப்படியான போலி வாக்காளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேண்பாக்கம் கிராமத்தில் அனில்மேஷ்ராம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் கள ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், செங்கல்பட்டு கோட்டாட்சியர் சாகிதா பர்வீன்,செங்கல்பட்டு வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்