கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு - பெரியகங்கணாங்குப்பம், பூவாலையில் மத்தியக் குழு ஆய்வு :

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பெய்த தொடர் கனமழையால், கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில்,  முஷ்ணம், குமராட்சி, பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட் டத்தின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த மழையால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. சுமார் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

கெடிலம், தென்பெண்ணை ஆற்றுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் கடலூரில் சுமார் 50 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. கடலூர் நகரத்தையொட்டியுள்ள குறிஞ்சிநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகர்களில் தண்ணீர் புகுந்தது.

இந்த பாதிப்பை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்காக நேற்று காலை மத்திய அரசின் உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜீவ்சர்மா தலைமையில் வேளாண், கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் விஜய்ராஜ் மோகன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக மண்டல அலுவலர் ரணன் ஜெய்சிங், ஊரக வளர்ச்சி துறை சார்பு செயலாளர் எம்விஎம் வரபிரசாத் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

அவர்களுடன் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திரன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று கடலூர் அருகே பெரியகங்கணாங்குப்பம் பகுதி தென்பெண் ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள வீடுக ளின் சேதத்தை காட்டினர்.

மேலும் பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங் களை மத்தியக் குழுவினர் பார்வை யிட்டனர்.

தொடர்ந்து அக்குழுவினர், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலைகிராமத்தில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட விளைநிலங்களை பார்வை யிட்டு, விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அங்கும் பாதிக்கப்பட்டுள்ள பயிர் வகைகள் குறித்து காட்சிப்படுத்தியதை பார் வையிட்டனர். இந்த ஆய்வின் போது கடலூர் சட்டமன்ற உறுப்பினர்கோ.ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன், கூடுதல் ஆட்சி யர்கள் ரஞ்ஜீத் சிங், பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்