கடலூர் மாவட்ட வெள்ள சேத பகுதிகளை பார்வை யிட வந்த மத்தியக் குழுவிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார் பில், அதன் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மனு ஒன்றை அளித்தார்.
அதில், “மழை, வெள்ளம், புயல், வறட்சி சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடிய மாவட்டமாக கடலூர் உள்ளது. இந்த மாவட்டத்தை இயற்கை பேரழிவு பாதித்த மாவட்டமாக அறிவித்து, நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுப்புறத்தில் உள்ள ஏழெட்டுமாவட்டங்களின் வடிகால் மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருப்பதால், சுற்றுப்புற மாவட்டங்களின் மழை நீர், கெடிலம், பெண் ணையாறு, வெள்ளாறு, மணிமுக் தாறு, கொள்ளிடம் மற்றும் என்எல்சிசுரங்க நீர் குடியிருப்பு பகுதிகளில், வயல்களில் புகுந்து பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
தென்பெண்ணையாற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளி யேற்றியதால் நெல்லிக்குப்பம். கடலூர் பகுதிகளில் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. வெள்ள நீரில் மூழ்கி 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சுவர் இடிந்துவிழுந்து 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம், காயமடைந்தோர் குடும்பத் திற்கு உரிய நிவாரணம், மழையால் சேதடைந்த வீடுகளுக்கும், தண் ணீர் புகுந்த வீட்டிற்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேர் அளவில் நெல், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், பருத்திஉள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட் டுள்ளன. இதற்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும். கால் நடை உயிரிழப்புக்கும் உரிய நிவா ரணம் வழங்கிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago