தியாகத்துக்கு அங்கீகாரம் : ‘வீர் சக்ரா’ வீரரின் மனைவி பெருமிதம்

கடந்த ஆண்டு ஜூனில் காஷ் மீரின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவா டானை வட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனி வீர மரணமடைந்தார்.

இந்நிலையில் பழனியின் தியாகத்தைப் போற்றும் வகையில் மத்திய அரசு அவருக்கு ராணுவத்தின் உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருதை கடந்தாண்டே அறிவித்தது. டெல்லியில் நேற்று ராணுவத்தினருக்கான வீர, தீரச் செயல்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பழனியின் மனைவி வானதி தேவியிடம் வீர் சக்ரா விருதை வழங்கினார். விருது குறித்து வானதிதேவி மொபைல் போன் மூலம் கூறுகையில், எனது கணவர் செய்த தியாகத்துக்குக் கிடைத்த இவ்விருதை மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE