மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுபவருக்கு - சிவகங்கையில் ஹெல்மெட் அணியவில்லையென அபராதம் :

By செய்திப்பிரிவு

மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர் மானாமதுரை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சிவகங்கைக்கு ஆட்டோ ஓட்டி செல்லாத இவருக்கு சிலதினங்களுக்குமுன்பு, அவரது ஆட்டோ பதிவு எண்ணைக் குறிப்பிட்டு ஹெல்மெட் அணியவில்லை என சிவகங்கை போக்குவரத்து போலீஸார் ரூ.100 அபராதம் விதித்ததாகத் தகவல் வந்தது.

ஆட்டோ ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிய வேண்டு மென்ற விதிமுறை இல்லை. உயரதிகாரிகளின் ‘டார்க்கெட்’ நெருக்கடியால் போலீஸார் இதுபோன்று அபராதம் விதிக்கின்றனர்.

சமீபகாலமாக மாவட்டத்தில் பல இடங்களில் சாலையில் செல்லும் ஏதாவதொரு வாகனத் தின் எண்ணைக் குறிப்பிட்டு விதிமீறல் இருப்பதாக அபராதம் விதிக்கின்றனர். ஆவணங்களை சரிபார்ப்பது கூட இல்லை. சிலசமயங்களில் இருசக்கர வாகன விதிமீறல்களை மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கும், மூன்று, நான்கு சக்கர வாகன விதிமீறல்களை இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கின்றனர்.

வாகன உரிமையாளர்களும் போலீஸாருக்கு அஞ்சி ‘இ-சலான்’ மூலம் அபராதத்தை செலுத்துகின்றனர். தட்டிக் கேட்பவர்களிடம் வேறு ஏதாவது வழக்குப் பதிந்து விடுவோம் என போலீஸார் மிரட்டுவதால், அப்பாவி மக்கள் வேறுவழியின்றி அபராதம் செலுத்துகின்றனர்.

மாதம்தோறும் ‘டார்க் கெட்டுக்காக’ போலீஸார் இஷ்டத் துக்கு அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்