ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்ப பயிற்சி :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் சார்பில் மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒருவார பயிற்சி தொடங்கியது. மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் பயிற்சி நடைபெறுகிறது.

பயிற்சியில் தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 28 மீனவர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் பயிற்சியை தொடங்கி வைத்தார்.

மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குநரக இயக்குநர் நீ.நீதிச்செல்வன் பயிற்சி குறித்து விளக்கினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் த.ரவிக்குமார் வரவேற்றார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ந.வ.சுஜாத்குமார், மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செ.விஸ்வநாதன், மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர் இரா.அமல் சேவியர் கலந்துகொண்டு பேசினர்.

கடல்சார் மின்னணுச் சாதனங்களை கையாளுதல், கடலில் முதலுதவி மற்றும் மீனவர் பாதுகாப்பு, ஆழ்கடல் வானிலை, மாலுமிக் கலை வரைபடங்கள், ஆழ்கடல் செவுள் வலை மற்றும் ஆயிரங்கால் தூண்டி வடிவமைப்பு, கடற்பயண விதிகள், தீயணைப்பு முறைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்