உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வரலாற்றுத் துறை, சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து உலக பாரம்பரிய தொல்லியல் விழிப்புணர்வு பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் நசீர் அகமது தலைமையில் வரலாற்றுத் துறைபேராசிரியர்கள் மற்றும் இளங்கலை மூன்றாம் ஆண்டு, முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.
பயணத்தை கல்லூரி முதல்வர் முகமது சாதிக் தொடங்கி வைத்தார். ஆதிச்சநல்லூர் வந்த அவர்களை ஊராட்சித் தலைவர் பார்வதி சங்கர் வரவேற்றார். ஆதிச்சநல்லூர் தொல்லியல் கள இயக்குநர் பாஸ்கர் தொல்பொருட்களை காட்சிப்படுத்தி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் முத்துக்குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உடனிருந்தனர்.
தொடர்ந்து சிவகளை சென்ற மாணவர்களை ஊராட்சித் தலைவர் பிரதிபா மதிவாணன் மற்றும் தொல்லியல் துறை பணியாளர்கள் சுதாகர், திருப்பதி கணேஷ் வரவேற்றனர். சிவகளையைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் மாணவர்களுக்கு சிவகளை அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பின்னர் மாணவர்கள் கொற்கை சென்று பார்வையிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago