குடியாத்தம் அருகே வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட - கிராமங்களுக்கு தற்காலிக இரும்பு பாலம் :

By செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே வெள்ளத் தால் துண்டிக்கப்பட்ட ஒலக்காசி உள்ளிட்ட கிராமங்களுக்கு தற்கா லிக இரும்புப் பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டுவரப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கவுன்டன்யா ஆறு பாலாறுக்கு இடைபட்ட பகுதியில் ஒலக்காசி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்காக நத்தமேடு பகுதியில் சுமார் 37 அடி நீளம் கொண்ட சிறுபாலம் உள்ளது. கடந்த 19-ம் தேதி பெய்த கன மழையால் நத்தமேடு சிறுபாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதன் காரணமாக ஒலக்காசி, சித்தாத்தூர், ஆலம்பட்டறை உள்ளிட்ட கிராம மக்களுக்கு குடியாத்தம் நகருடன் இருந்த போக்குவரத்து தொடர்பு முற்றிலும் தடைபட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து தற்காலிக இரும்புப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சேதமடைந்த சிறுபாலம் இருந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சுமார் 40 அடி நீளத்துக்கு தற்காலிக இரும்புப் பாலத்தை அமைத்துள்ளனர். இந்த தற்காலிக பாலத்தின் மூலம் கடந்த 4 நாட்களுக்குப்பிறகு கிராம மக்களுக்கு போக்குவரத்து தொடர்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்