மாணவர்களிடம் பணம் வசூலித்த புகாரில், சூடாபுரம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து சிஇஓ மகேஸ்வரி உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்து வருபவர் வெள்ளதங்கம். இவர் பள்ளி மாணவர்களிடம் தலா ரூ.200 பணம் வசூலித்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோர்களின் புகாரின் பேரில், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முருகன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது உரிய காரணம் இல்லாமல் மாணவர்களிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது. மேலும், பள்ளியில் ஆய்வு செய்த டிஇஓ, கழிவறை அசுத்தமாகவும், வகுப்பறையில் ஆங்காங்கே மின்ஒயர்கள் தொங்கியபடி ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டறிந்தார்.
இதுதொடர்பான அறிக்கை யை, டிஇஓ., கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் சமர்பித் தார். அந்த அறிக்கையின் பேரில், பள்ளியை சீராக பராமரிக்க வில்லை, தேவையின்றி அரசுப் பள்ளி மாணவர்களிடம் பணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தலைமை ஆசிரியர் வெள்ளதங்கத்தை பணியிடை நீக்கம் செய்து சிஇஓ., உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago