வாலாஜாபாத் அருகே உள்ள அவளூர் பகுதியில் பாலாற்று வெள்ளம் பள்ளிக்குள் நுழைந்துள்ளது.நீரை வெளியேற்ற விரைவாகநடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
வாலாஜாபாத் அருகே உள்ள அவளூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவளூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் பள்ளியையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்தப் பள்ளியில் 900 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளி திறக்கப்பட்டால் வகுப்புகளில் அமர்ந்துமாணவர்கள் கல்வி கற்பது சிரமமாக இருக்கும் என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளியில் தேங்கியுள்ள தண்ணீரை வேளியேற்றவும், பள்ளிக்குள் தண்ணீர் வராமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago