காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி : ஒருவருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் சிக்கினர்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் அருகே திண்டிவனம்-பெங்களூர் புறவழிச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த2 நாட்களாக பெட்ரோல் இருப்புஇல்லாததால் பங்க்கை மூடிவிட்டு ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் ஒருமணி அளவில் அங்கு 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 5 இளைஞர்கள்பங்க் ஊழியர்களிடம் பருவதமலைக்கு செல்ல வழி கேட்டுள்ளனர்.

வழியை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர்களில் இருவர்மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த ஊழியரை வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டுஅக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்தனர். உடனே 3 பேர் அங்கிருந்து தப்பினர். இருவர்மோட்டார் சைக்கிளை எடுப்பதற்குள் மக்கள் வந்துவிட்டதால்மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

உடனே பாலுசெட்டி சத்திரம் போலீஸார் பல இடங்களில் சோதனை நடத்தியபோது, மோட்டார் சைக்கிளில் தப்பிய மூவர் வேகவதி ஆற்றுப்பாலம் அருகே சிக்கினர். அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும், இருவர் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெட்ரோல் பங்க்,வங்கிகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்