சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க - முதல்வருக்கு 30 அமைப்புகள் கோரிக்கை மனு :

By செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதிப்படி சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க வலியுறுத்தி, முதல்வருக்கு வழக்கறிஞர் சங்கம், வர்த்தகர் சங்கம், ஆசிரியர் அமைப்புகள், விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 அமைப்புகள் இணைந்து கோரிக்கை மனுவை அனுப்பினர்.

அந்த மனு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து 1985-ல் சிவகங்கை புதிய மாவட்டமாக உருவானபோது, மாவட்ட நீதி மன்றம் மதுரையில் செயல்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு சிவகங்கைக்கு வந்தது. தற்போது சிவகங்கையில் ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உட்பட 17 நீதிமன்றங்கள் உள்ளன. 350 வழக்கறிஞர்கள் உள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பேசும்போது, ‘சிவகங்கையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும்,’ என வாக் குறுதி அளித்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ‘ கார்த்தி சிதம்பரம் எம்பி, காரைக்குடி எம்எல்ஏ கோரிக்கை வைத்ததால் காரைக் குடியில் சட்டக்கல்லூரி தொடங்கப்படும்,’ என சட்ட அமைச்சர் அறிவித்தார். இது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இதன்மூலம் சிவகங்கை தொகுதி மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். அனைத்துவகை நீதிமன்றங்களும் சிவகங்கையில் இருப்பதால் சட்ட மாணவர்களின் நலன்கருதி சிவகங் கையில் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்