வைகுண்டத்தில் வாரச்சந்தை : ரூ.1.25 கோடியில் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

வைகுண்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த சந்தை செயல்படாமல் முடங்கியது. வைகுண்டத்தில் வாரச்சந்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று வைகுண்டம் பேரூராட்சி சந்தையடி தெருவில் புதிதாக வாரச்சந்தை அமைக்க ரூ.1 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பூமி பூஜை நேற்று நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வாரச்சந்தை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.

வைகுண்டத்தில் புதிய வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது: இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரச்சந்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த சந்தையில் 28 கடைகள் அமைக்கும் வகையில் பணிகள் நடைபெறவுள்ளன. கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் சந்தை மக்கள் பயன்பாட்டுக்கு வரும். வைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றார். திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், வைகுண்டம் பேரூராட்சி செயல் அலுவலர் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்