செங்கம் அருகே மயானத்துக்கு சென்றபோது - செய்யாற்றில் அடித்து செல்லப்பட்ட ஒருவர் மீட்பு : பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தில் உள்ள மயானத்துக்கு, உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய நேற்று கொண்டு செல்லப்பட்டது. அந்த மயானத்துக்கு, செய்யாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு கடந்து செல்லும்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி(65), பரசுராமன்(67) ஆகியோர் செய்யாற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதையறிந்த கிராம மக்கள், அவர்கள் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில், பரசுராமன் மீட்கப்பட்டுள்ளார். சுப்ரமணியின் நிலை குறித்து தெரியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செய்யாற்றின் மீது பாலம் கட்டிக் கொடுக்க வலியுறுத்தி நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தி.மலை – செங்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மண்மலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் செங்கம் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், “செய்யாற்றின் மீது பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம், ஆனால் எங்களை கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. செய்யாற்றில் தண்ணீர் செல்லும்போது, உயிரை பணயம் வைத்து கடந்து செல்கிறோம். இதற்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்” என்றனர்.

இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும், சாலை மறியலை கைவிட கிராம மக்கள் மறுத்துவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்