உளுந்தூர்பேட்டையில் கனமழை குடியிருப்புகளை மீண்டும் சூழ்ந்த மழை நீர் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் சங்கராபுரம்,திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி யது. மேலும் இருதினங்களுக்கு முன் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திரு நாவலூர், உளுந்தூர்பேட்டைப் பகுதியில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளலும் வெள்ளநீர்சூழ்ந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் தண்ணீர் வடிய நடவ டிக்கை மேற்கொண்டதால், நேற்றுகாலை தண்ணீர் வடிந்து காணப் பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்த தால், உளுந்தூர்பேட்டைப் பகுதி யில் சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. பாதூர் ஏரியில் இருந்து உபரி விளைநிலப் பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும்புகுந்ததால் முழங்கால் அளவுக்குதண்ணீர் தேங்கியது. இதனால்அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்கு ஆளாகியுள் ளனர். மீண்டும் கனமழையால் உளுந்தூர்பேட்டை மக்கள் மேலும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். உளுந்தூர்பேட்டை பேரூராட்சி நிர்வாகமும், வருவாய் துறையினரும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்