பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிப்போர் மீது நடவடிக்கை : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பட்டாசு ஆலைகளில் பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். எஸ்பி மனோகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து பட்டாசுகள் மற்றும் சரவெடி களை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படும். விதிமுறைகளை மீறும் தொழிற் சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கருண மயே பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்