தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆரோக்கியராசு தலைமை வகித்தார். கூட்டத்தில், “கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். பீடித் தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் ஆதார் எடுக்காத குழந்தைகளுக்காக சிறப்பு முகாம்களை நீட்டிப்பு செய்து பள்ளி அளவிலேயே முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும். தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலை அமைக்கும் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
தென்காசி அரசு ஊராட்சி பள்ளிகளுக்கு எமிஸ் அடிப்படையில் கூடுதல் பணியிடங்களை நியமனம் செய்ய வேண்டும். அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago