விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் வகையில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலைவேம்பு, செம்மரம், வேங்கை, சந்தனம் உட்பட பல்வேறு வகையான ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 600 தரமான மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத் தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), ஆகியோர் தலைமை வகித்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். இதில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்