ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரைகனமழையால் 23 பேர் உயிரிழப்பு : 121 முகாம்களில் 7,959 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கனமழையால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள் ளனர். மேலும், 121 முகாம் களில் 7,959 பேர் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல் வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. 14, 800 கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 444 வீடுகள் மழையால் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில், 52 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இதில், நேற்று முன்தினம் ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 60 வீடுகள் இடிந்தன. இதில் 7 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. வேலூர் மாவட்டத்தில் 53 இடங்களில் முகாம்கள் அமைக் கப்பட்டு, அங்கு 5,334 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 14 மாடுகள் உயிரிழந்துள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 374 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 42 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 68 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்தன. 4 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் 40 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில், 10 முகாம்களில் 1,373 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழையால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 மாடுகள் உயிரிழந்துள்ளன. இதுவரை 402 வீடுகள் இடிந்த சேதமடைந்துள்ளன. இதில், 75 வீடுகள் முழுவதுமாக இடிந் துள்ளன.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 74 குடிசை வீடுகள், 48 ஓட்டு வீடுகள் என மொத்தம் 122 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் 18 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 58 முகாம்களில் 1,252 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்