திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் எம்.பி. முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நூல்விலை உயர்வால் ஒப்பந்தம் செய்த வெளிநாட்டு ஆர்டர்களை முடிக்க முடியாதசூழ்நிலையும், புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் செய்வதில்சிக்கலும் ஏற்பட்டுள்ளது.இதற்கு பஞ்சு பதுக்கல், இடைத்தரகர்களின் அதிக லாபநோக்கம், பஞ்சு நூல்ஏற்றுமதி, இறக்குமதி பஞ்சுக்கு விதிக்கப்படும் 12 சதவீத வரி ஆகியவையே காரணம். இப்பிரச்சினைகளை களைய, அவசர ஆலோசனைக்கூட்டம், காயத்திரி ஹோட்டலில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இப்பிரச்சினையின் தீவிரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நூல் விலையேற்றத்தைதடுக்கவும், தொழில்முனைவோர் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர் வாழ்வாதாரம் காக்கவும் அனைவரும் ஒன்றுபட வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago