திருப்பூரில் அனைத்து பின்னலாடை ஜாப் ஒர்க் சங்கங்களின் கூட்டு கமிட்டியின் ஆலோசனைக்கூட்டம், நிட்மா சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் அகில் சு.ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.காந்திராஜன், தென்னிந்திய இறக்குமதி இயந்திரபின்னலாடைத் துணி உற்பத்தியாளர்கள் சங்க (சிம்கா) செயலாளர் என்.பி.சிவானந்தன், திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் டி.ஆர்.காந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக பின்னலாடைத் துறையின் அனைத்து வகை மூலப்பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், தொழிலை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுஉற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து வரும் டிசம்பர்1-ம் தேதி முதல் அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்களும், தற்போது பெற்று வரும் கட்டணங்களில் இருந்து 25 சதவீதம் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அனைத்துஜாப் ஒர்க் கட்டணங்களையும் பில் வழங்கியதில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
மேலும் அனைத்து பின்ன லாடை ஜாப் ஒர்க் நிறுவனங்களில் ஏற்படும் திடீர் விபத்துகளுக்கு, கூட்டு சட்டக்குழு ஏற்படுத்தி தீர்வு காண்பது என கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago