தருமபுரி மாவட்ட வளர்ச்சி மேம்பட்டு வருகிறது : கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எம்.பி பேச்சு

தருமபுரி மாவட்ட மக்களுக் கான வளர்ச்சிகள் அரசின் திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் எம்.பி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், ஆட்சியர் திவ்யதர்சினி முன்னிலையில், தருமபுரி எம்பி செந்தில்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சிறப்புரை வழங்கினார். கூட்டத்தில், எம்பி செந்தில்குமார் பேசியது:

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்புக் குழுக் கூட்டம் காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கும், மேம் பாட்டுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டங் களுக்கான நிதி மத்திய, மாநில அரசுகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசின் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியும், மக்களுக்கான வளர்ச்சியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை துறை அலுவலர்கள் அரசின் விதி முறைகளை பின்பற்றி, அரசின் வழிகாட்டு நெறி முறைகளின்படி சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட கண்காணிப்புக் குழு தலைவர் கவனத்துக்கு கொண்டு வந்தால் அதற்கான தீர்வை கண்டறிந்து திட்டங்களை காலதாமதமின்றி நிறைவேற்ற வசதியாக இருக்கும்.இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் மருத்துவர் வைத்திநாதன், தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா, ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் முத்துசாமி, வேளாண் இணை இயக்குநர் வசந்தரேகா, முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்