அரசே பாகுபாடு காட்டுவது சரியல்ல - மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 நிவாரணம் வேண்டும் : திமுக எம்எல்ஏ சம்பத் கோரிக்கை

புதுச்சேரி முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ சம்பத் வெளி யிட்டுள்ள அறிக்கை:

சிவப்பு நிற அட்டைதாரர்களை ‘வறுமை கோட்டுக்கு கீழ் உள் ளவர்கள்’ என்றும் மஞ்சள் நிற அட்டை வைத்திருப்போரை ‘வசதிபடைத்தவர்கள்’ என்றும் புதுச்சேரியில் வகைப்படுத்தப்பட்டுள் ளது. சிவப்பு நிற அட்டைக்கு ஆண் டின் வருமான வரம்பு இதுவரை நிர்ணயம் செய்யவில்லை. முந்தைய காலங்களில், வசதி படைத்தவர்களில் சிலர் தங்களின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, சிவப்பு நிற அட்டைகளை பெற்றுள்ளனர். தற்போது, சுகாதாரத்துறை யின் கீழ் கொடுக்கப்படும் ரூ.5லட்சம் மருத்துவக் காப்பீடு,இலவச அரிசி திட்டம், விழாக்கால உதவித் தொகை எனசிவப்பு நிற அட்டைகளுக்கு மட்டுமே அரசு தரும் சலுகைகளே இப்பிரச்சினைகளுக்கு காரணம்.

‘சிவப்பு நிற அட்டை தாரர்களுக்கு மட்டுமே ரூ. 5 ஆயிரம் மழை நிவாரணம்’ என்று முதல்வர் ரங்கசாமி தற்போது அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் பாகுபாடின்றி மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.

இத்தொகையை வழங்க அனைத்து சட்டமன்ற உறுப் பினர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE