பரோடா வங்கியின் வீட்டுக் கடன் சிறப்பு கண்காட்சி : புதுவையில் முதல்வர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

பரோடா வங்கியின் புதுச்சேரி பிராந்தியம் சார்பில் வீட்டுக் கடனுக்கான இரண்டு நாள் சிறப்பு கண்காட்சி புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று தொடங்கியது.

பாங்க் ஆப் பரோடா வங்கி, முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும், ‘பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2021’ கண்காட்சி புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள மாவட்ட மக்களின் வசதிக்காக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு கண்காட்சியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல் வம் பங்கேற்றார்.

இதில் பேசிய முதல்வர் ரங்க சாமி, வங்கியின் முயற்சியை பாராட் டினார். மேலும் புதுச்சேரியின் வளர்ச்சியில் வங்கிகள் பங்கு பெறவேண்டும் என அழைப்பு விடுத் தார்.

தொடர்ந்து வங்கியின் பொதுமேலாளர் ரங்கராஜன் பேசும் போது, ‘‘வீட்டு வசதி கடன் திட்டம் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. தனி வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குவோர், சொந்தமாக வீடு கட்டுவோர், வீடுகளை புதுப்பிக்க விரும்புவோர் என அனைவரின் தேவைக்கேற்ப மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

அது மட்டுமன்றி, ஏற்கெனவே அதிக வட்டி விகிதத்தில் வேறு நிறுவனங்களில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளோர் பரோடா வங்கிக்கு கடனை மாற்றிக் கொள்ளும் வசதியும் மேலும் அதே இஎம்ஐக்குள் ‘டாப் அப்’ செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.’’என்றார்.

இதில் வங்கியின் அலுவலர்கள் பயனாளிகளிக்கு உடனுக்குடன் கடன் முன் அனுமதி கடிதம் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வங்கியின் பிராந்திய மேலாளர் கண்ணன் மற்றும் துணை பிராந்திய மேலாளர் அமலா சவுந்தரராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE