தொடரும் கனமழையால் - பிடெக், துணை மருத்துவப் படிப்புகளில் சேர கால நீட்டிப்பு :

கனமழையால் புதுவையில் பிடெக், துணை மருத்துவப்படிப் புகளில் சேர காலக்கெடு வரும்24-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

புதுவையில் பி.டெக்., பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி., (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி.,நர்சிங், பிசியோதெரபி, எம்.எல்.டி, பி.பார்ம், பி.எல்., (5 ஆண்டு சட்டப்படிப்பு), டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., உள்ளிட்ட படிப்புகளுக்கு 10,435 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இம் மாணவர்களுக்கு கடந்த 9-ம் தேதி, முதல்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடம் கிடைத்த மாணவர்கள் நவ.19-ம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கன மழை காரணமாக பி.டெக்., மற்றும் துணை மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற் கான காலக்கெடுவை, வரும் 24-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலை, அறிவியல் படிப்பு களுக்கு விண்ணப்பித்த மாணவர் களுக்கு கடந்த மாதம் 23-ம் தேதி முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, மொத்தமுள்ள 4,260 சீட்டுகளில் 4,170 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடம் கிடைத்த கல்லுாரிகளில், கடந்த 8-ம் தேதி வரை மாணவர்கள் சேர்ந்தனர்.

முதல் கவுன்சலிங்கில் இடம்கிடைத்து சேர்ந்துள்ள மாணவர்கள் சிலர், தங்கள் விருப்பபாடப் பிரிவில் சேர இரண்டாம் கவுன்சலிங்கிற்கு விண்ணப் பித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்