தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் - கடலூர் மாவட்டத்தில் 22,750 ஏக்கர் பாதிப்பு :

தென்பெண்ணை ஆற்றில் ஏற் பட்ட வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 22,750 ஏக்கர் விளை நிலங் கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சாத்தனூர் அணை திறக்கப்பட் டதையடுத்து, 1.05 லட்சம் கனஅடி கொள்ளளவு கொண்ட தென்பெண்ணையாற்றில் 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் சென்ற தால் நேற்று முன்தினம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மாவட்ட எல்லையான தளவானூர் முதல் வடிநில பகுதியான தாழங்குடா வரையில் சுமார் 46 கி.மீ தூரத்திற்கும் உபரி நீர் கரையோர குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

குறிப்பாக கிராமப் புறங்களில் விளைவிக்கப்பட்டுள்ள நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, காய்கறி, மலர் சாகுபடிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன.

தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் சுமார் 22,750 ஏக்கர் பரப்பளவில் இப்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் வேளாண் துறையினர் தெரிவித்தனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரியநிவாரணம் அறிவிக்க வேண்டு மென விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE