ராமநாதபுரம் மாவட்டம், ஓரிக்கோட்டையில் அமைய உள்ள புத்த ஆலயத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அடிக்கல் நாட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி. 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் புத்த சமயம் வெகுவாகப் பரவி இருந்தது.
இம்மாவட்டத்தில் பழமையான புத்தர் சிலைகள் ஏற்கெனவே ராமேசுவரம் அரியான்குண்டு பகுதியிலும், சுந்தரபாண்டியன் பட்டினம் மற்றும் திருவாடானை தாலுகாவில் சம்மந்தவயல் ஆகிய இடங்களிலும் கண்டெடுக்கப் பட்டன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டையில் உள்ள சாந்திபுரம் பகுதியில் பிரஹ்போதி புத்த விஹார் சார்பாக ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக புத்த ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு பிக்கு மௌரியார் புத்தா தலைமை வகித்தார். இவ்விழாவில் அடிக்கல் நட்டு கல்வெட்டினை திறந்து வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பிக்குகள் வரஜோதி, பன்னியா, சிவப்பிரகாசம், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை ஒன்றியத் தலைவர் முகம்மது முக்தார், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் தமிமுன் அன்சாரி. ஓரிக்கோட்டை ஊராட்சித் தலைவர் காந்திமதி மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago