மதுரையில் தனியார் பள்ளிகளில் இருந்து 1,108 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை உலகனேரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயிலை திறந்து வைத்து அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: இப்பள்ளியில் 25 வகுப் பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் நடப்பாண்டில் தனியார் பள்ளியிலிருந்து 1108 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதற்கு அரசுப் பள்ளியில் கல்வி கற்பிக்கும் திறன் உயர்ந்துள்ளதையே காட்டுகிறது என்று பேசினார். நிகழ்ச்சியில், ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் நாராயணன், தலைமை ஆசிரியர் சுசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago