கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களில் நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் மாவட்டம் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக தேன்கனிக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வயல்களில் தண்ணீரை வெளியேற்ற முடியாததால், நெற்பயிர்கள் அழுகிய நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அறுவடை செய்ய முடியாமலும் வைக்கோலை பயன்படுத்த முடியாமலும் விவசாயிகள் முழுமையாக இழப்பை சந்தித்துள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago