கும்பகோணத்தில் விவசாயம், பாரம்பரிய நெல் கண்காட்சி :

கும்பகோணத்தில், மாகாண ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ஆகியவற்றின் சார்பில், விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற 2-வது நாள் கண்காட்சியை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, இக்கண்காட்சியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ​பார்வையிட்டார்.

கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாவலர் நெல் ஜெயராமன் ஆகியோரின் படங்களுக்கு அமைச்சர் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

இக்கண்காட்சியில், நவீன விவசாய கருவிகள், விவசாய உபகரணங்கள், பாரம்பரிய விதை ரகங்கள், இயற்கை விவசாயத்தை வரவேற்கும் அரங்குகள் மற்றும் சந்தைப்படுத்துதலை எளிமைப்படுத்த, நோய்த் தாக்குதலை போக்குவதற்கான நவீன தொழில் நுட்ப வசதிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி இன்றுடன் (நவ.21) நிறைவடைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்