சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர், 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்ப கலச பூஜை, சண்முகர் ஜெபம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேய சுப்பிரமணியருக்கும் 21 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேய சுப்பிரமணிய சுவாமிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை ஹரி பட்டர், சுப்பிரமணிய பட்டர், அரவிந்த் பட்டர் செய்திருந்தனர். கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ , மண்டகப்படிதாரர்களான நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE