உளுந்து சாகுபடி பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் :

By செய்திப்பிரிவு

உளுந்து சாகுபடி குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் வரதராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஜெயசெல்வின் இன்பராஜ் வயல்வெளி பள்ளியின் அன்றாட நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்தார். ஸ்காட் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாசான செல்வம் உழவன் செயலி குறித்து பேசினார். உழவியல் துறையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர் முருகன் டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் ரைசோபியம் கொண்டு உளுந்து விதை நேர்த்தி செய்யும் முறைகளை விளக்கினார். பயிர் பாதுகாப்பு துறையின் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னோடி விவசாயி ஆறுமுகம், வயல்வெளி ஆய்வு, சுற்றுச்சூழல் ஆய்வு, குழு விவாதம் குறித்து தெரிவித்தார். துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் காளிராஜ் அரசின் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்