கோழிப்போர்விளையில் 22 மி.மீ., மழை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நின்றாலும் மலையோரம் மற்றும் அணைப் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பொழிகிறது.

கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 22 மி.மீ., மழை பதிவானது. சிற்றாறு ஒன்றில் 19 மி.மீ., சிவலோகத்தில் 18, அடையாமடையில் 13, சுருளகோட்டில் 11, நாகர்கோவில், பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறில் தலா 10 மி.மீ., மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.48 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,511 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,757 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேறுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. அணைக்கு 971 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,020 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேறுகிறது. அணைப்பகுதிகளை பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்