சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ

சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவோம் என்று அறிவித்து இருப்பதை, முறையாக நாடாளுமன்றத்தில் முன்வைத்து அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வரவேண்டும். பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட அரசு நேரடியாக கொள்முதல் செய்வதை தொடர வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி, செஸ் வரி ஆகியவற்றை உடனடியாக குறைக்க வேண்டும். சமையல் காஸ் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த பாமக நிர்வாகி, நடிகர் விஜய் சேதுபதியை தாக்குபவர்களுக்கு பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் போன்றோரின் செயல்கள் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE