கழுகுமலை சமணர் சிற்பங்களை பள்ளி ஆசிரியர்கள் பார்வை :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வார விழா நவ.19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி தலைமையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 140 பேர் நேற்று பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் கோட்டைக்கு சென்று பார்வையிட்டனர். கோட்டை கட்டப்பட்ட வரலாறு, கோட்டையின் உள்பகுதியில் உள்ள படங்களை பார்த்து ரசித்தனர்.

தொடர்ந்து கழுகுமலைக்கு வந்தனர். அவர்களுக்கு கழுகுமலை களஞ்சியம் குழு பெண்கள் மற்றும் திருவள்ளுவர் கழகத் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, ‘கழுகுமலை வரலாறும், பண்பாடும்’ என்ற நூல் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மலை மீதுள்ள வெட்டுவான் கோயில், சமணர் சிற்பங்களை பார்வையிட்டனர். பின்னர் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய அகழாய்வு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE