வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாலாறு, பொன்னை, கவுன்டன்யா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், மேல்பாடி-பொன்னை இடையிலான தரைப்பாலமும், உள்ளி-மாதனூர் இடையிலான தரைப்பாலமும் சேதமடைந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் 3,800-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய ஆறுகளில் தொடர்ந்து நீர்வரத்து குறையாமல்உள்ளது.
குறிப்பாக, கவுன்டன்யா ஆற்றில் வெள்ளம் குறையாத நிலையில் இரவு நேரத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக பருவமழை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நந்தகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேல்பாடி தரைப்பாலம், கவுன்டன்யா ஆற்றின் தரைப்பாலம், காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago