திம்பம் மலைப்பாதையில் - அரசுப் பேருந்து - லாரி மோதி விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு :

By செய்திப்பிரிவு

திம்பம் மலைப்பாதையில் பயணிகளை ஏற்றி வந்த கர்நாடக அரசு சொகுசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மைசூர் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த கர்நாடக அரசு சொகுசு பேருந்து திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று அதிகாலை சென்றது.

5-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கர்நாடகாவில் இருந்து அரிசி பாரம் ஏற்றி வந்த லாரி, பேருந்து மீது மோதியது.

இதில், சாலையின் பக்கவாட்டுச் சுவரை உடைத்து, லாரி பள்ளத்தில் இறங்கும் நிலையில் நின்றது.

பேருந்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் இரண்டு மணி நேரம் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்