திருவள்ளூர் மாவட்டத்தில் 697 ஏரிகள் நிரம்பின :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்தஇரு வாரங்களுக்கு மேலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நீர் நிலைகள் நிரம்பிவருகின்றன. இதனால், மாவட்டத்தில் நீர்வளத் துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,155 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி, 697 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதில், நீர்வளத் துறையின் 594 ஏரிகளில், 375 ஏரிகளும், ஊரகவளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 581 ஏரிகளில், 322 ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன.

மேலும், மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில், 316 ஏரிகள் முழு கொள்ளளவில் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 123 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் நீர் இருப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல், வடகிழக்கு பருவமழையால் நேற்றைய நிலவரப்படி, 2 பேர் உயிரிழந்துள்ளனர். 87 கால்நடைகளும், ஆயிரம் கோழிகளும் உயிரிழந்துள்ளன. மேலும், 58 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,071 குடிசை வீடுகளின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE