மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், பெரம்பலூரில் சுகாதார செவிலியர் கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், நாகை ஆட்சியர் அலுவ லகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுனந்தாதேவி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, பொருளாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தடுப்பூசி முகாமுக்கு வாகன வசதி அல்லது அதற்கான வாடகையை வழங்க வேண்டும். ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மருத்துவ வழிகாட்டு தலுக்கு மாறாக வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் புஷ்பவதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வசந்தா, பொருளாளர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மாவட்டத் தலைவர் பி.மரகதம் தலைமையில், செயலாளர் மு.க.சாந்தி, பொருளாளர் எம்.இந்திராகாந்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ரா.வசந்தா தலைமை வகித்தார். பொருளாளர்கள் பெ.தமிழ்ச் செல்வி, ஜா.வெஸ்லின் மேரி, செயலா ளர்கள் ஆ.பாலாம்பிகை, ராஜகுமாரி, துணைத் தலைவர்கள் ப.எஸ்தர் ராஜகுமாரி, ரா.இந்திராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவ லகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு, சுகாதார செவிலி யர்கள் சங்க மாவட்டத் தலைவர்கள் வி.கீதா, எம்.அஞ்சலை ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செய லாளர்கள் எஸ்.இந்திரா, எஸ்.பிரேமா, பொருளாளர்கள் கே.ராணி, ஏ.ராஜாத்தி உள்ளிட்டோர் பேசினர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்தான லட்சுமி தலைமை வகித்தார். செயலாளர்கள் செல்வ மணி, மெர்சிகிளாரா, பொருளா ளர்கள் நளினி, எழிலரசி, துணைத் தலைவர்கள் ஸ்டெல்லா, அறிவுக் கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் செவிலியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago